mariya

 

வாசகர்கள்

visitor counter  

 

 

 

திருவழிபாட்டு ஆண்டு

 

 

திருவழிபாட்டு ஆண்டு என்றால் என்ன?

 

கத்தோலிக்கத் திருச்சபையும் பிற கிறிஸ்தவ சபைகளும் ஓர் ஆண்டில் வருகின்ற பன்னிரண்டு மாதக் காலக்கட்டத்தில் கொண்டாடுகின்ற கால முறைகள், திருவிழாக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வருடச் சுழற்சி "திருவழிபாட்டு ஆண்டு" என அழைக்கப்படுகிறது. சில சமயங்களில் இதைத் "திருச்சபை ஆண்டு" "திருவழிபாட்டு நாள்காட்டி" "உரோமை நாள்காட்டி" என அழைப்பதும் உண்டு. இந்தக் காலச் சுழற்சி "திருவருகைக் கால" முதல் ஞாயிறன்று தொடங்கும் (ஏறக்குறைய டிசம்பர் மாதத் தொடக்கம்).

 

 

இச்சுழற்சியில் ஐந்து பெரிய காலங்கள் உண்டு. அவை "திருவருகைக் காலம்", "கிறிஸ்து பிறப்புக் காலம்", "தவக் காலம", "பாஸ்கா காலம", "பொதுக் காலம்". தவக் காலத்திற்கும் பாஸ்கா காலத்திற்கும் இடையே வரும் "பாஸ்கா முப்பெரும் நாள்கள்" எனப்படும் . இது ஆண்டவர் இயேசுவின் துன்பங்கள், சாவு, உயிர்த்தெழுதல் ஆகியவற்றை நினைவுகூர்கின்ற முப்பெரும் நாள்கள் ஆகும். இவையே பெரிய வியாழன், பெரிய வெள்ளி, பெரிய சனி என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மூன்று நாள்களையும் உள்ளடக்கிய காலம் திருவழிபாட்டு ஆண்டின் உச்சக்கட்டம் ஆகும்ளூ திருவழியாட்டு ஆண்டின் மையமும் இதுவே.

 

 

உயிர்பெற்றெழுந்த ஆண்டவரையோ, அவர் தாயாகிய கன்னி மரியாவையோ, புனிதர்களையோ நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் நாள்கள் "விழாக்கள்" (கநயளவள) என்று அழைக்கப்படுகின்றன. விழாக்களில் மூன்று வகைகள் உண்டு:

1) பெரு விழா (ளழடநஅnவைல)ளூ

2) விழா (கநயளவ)ளூ

3) நினைவு (அநஅழசயை).

 

1568ஆம் ஆண்டு திருத்தந்தை 5ஆம் பயஸ் என்பவர் விழாக்களை உள்ளடக்கிய ஒரு நாள்காட்டி வெளியிட்டார். அன்றிலிருந்து கடந்த நானூற்றைம்பது ஆண்டுகளாக அந்த நாள்காட்டியில் மேலும் பல விழாக்கள் சேர்க்கப்பட்டுவந்துள்ளன. வழிபாட்டு நாள்காட்டியில் விழாக்களின் எண்ணிக்கையை ஓர் எல்லைக்குள் வைத்திருக்கவேண்டும் என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) அறிவுறுத்தியது. இவ்வாறு, வழிபாட்டு நாள்காட்டியில் வழிபாட்டுக் கால முறைகள், கிறிஸ்தவ மரபு சார்ந்த விழாக்கள் ஆகியவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

 

திருவழிபாட்டு ஆண்டு தேவையா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். மனித வாழ்க்கையில் சில நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் கொண்டாடப்படுவது இயல்பு. எடுத்துக்காட்டாக, பிறந்த நாளைக் குறிப்பிடலாம். ஆண்டுக்கு ஒரு முறை பிறந்த நாளை நினைவுகூரும் போது, நாம் பிறந்ததற்கு நன்றி செலுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. நமது பிறப்பால் நமக்கும் பிறருக்கும் ஏற்பட்டுள்ள (ஏற்படுகின்ற, ஏற்படக்கூடுமான) நன்மைகளை நாம் உணர்ந்திட வாய்ப்பு ஏற்படுகிறது. அதுபோலவே, ஆண்டுதோறும் சுதந்திர தினம் அல்லது குடியரசு தினம் கொண்டாடும்போது, இந்திய நாடு தன் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் இந்தப் பாருலகில் வாழும் மக்களுக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் நினைவுபடுத்தி, இன்னும் சிறப்பாகச் செயல்பட ஓர் தூண்டுதல் பிறக்கிறது. எனவே, திருவழிபாட்டு ஆண்டு என்பது மனித இதயத்தில் ஆழப்பதிந்த ஒரு நாட்டத்தை வெளிப்படுத்துகிறது. நம்மைப் படைத்து அன்புசெய்து பாதுகாத்துவருகின்ற கடவுள் மட்டில் நமக்குள்ள ஆழ்ந்த பிடிப்பையும் நம்பிக்கையையும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் ஆண்டுக் கொண்டாட்டங்கள் உதவுகின்றன. கிறிஸ்தவ நம்பிக்கையில் ஊன்றிய ஓர் ஒழுங்குமுறையும் உருவாகிட வழிபாட்டு ஆண்டு துணைசெய்கிறது. ஏற்கெனவே நடந்த நிகழ்வுகளை "நினைவுகூர்தலும்", அந்த நிகழ்வுகளின் ஒளியில் இன்றைய வாழ்வைப் "புதுப்பித்தலும்", தொடர்ந்து வரும் நாள்களில் புத்துணர்வோடு "எதிர்நோக்கு" கொள்ளலும் ஆண்டுக் கொண்டாட்டங்கள் வழி சாத்தியமாகிறது.

 

கிறிஸ்தவ விழாக்களும் கால முறைகளும் கொண்டாடப்படும்போது கிறிஸ்தவ "மறைபொருள்"மீண்டும் மீண்டும் நம் வாழ்க்கையில் எதார்த்தமாகிறது. எனவே, இக்கொண்டாட்டங்கள் வழியாகக் கிறிஸ்தவ சமூகங்கள் தங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தும் வழி பிறக்கிறது. இறைவேண்டல், நோன்பிருத்தல், ஏழைகளுக்கு ஈதல், இரக்கச் செயல்கள் புரிதல், வழிபாட்டு நிகழ்வுகள் போன்ற வௌ;வேறு நற்செயல்களில் ஈடுபட்டு சாட்சியம் அளிக்கவும் முடியும். மேலும், வழிபாட்டுக் கொண்டாட்டத்தின்போது மறைக்கல்வியும் கிறிஸ்தவ உருவாக்கலும் நிகழும்.

 

இயேசு இவ்வுலகில் ஆற்றிய மீட்பு மற்றும் விடுதலைப் பணியை மையமாகக் கொண்டு வழிபாட்டு ஆண்டு அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, பாஸ்கா மறைபொருள் (இயேசுவின் துன்பங்கள்,சாவு, உயிர்த்தெழுதல்) வழிபாட்டு ஆண்டின் உச்சக்கட்டமும், தோற்றுவாயும், குவிமையமுமாகத் திகழ்கின்றது. இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாக இயேசுவைப் பின்செல்லும் கிறிஸ்தவ சமூகம் திருவழிபாட்டு ஆண்டின் சுழற்சியில் இயேசுவின் தாய் மரியாவை நினைவுகூர்கிறதுளூ யோசேப்பு, திருத்தூதர்கள் போன்ற பிற புனிதர்களின் நினைவைக் கொண்டாடுகிறதுளூ திருச்சபை வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டுகிறது. எனினும், கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல், வழிபாட்டு ஆண்டு நாம் வாழ்கின்ற இந்தக் காலத்தில் ஒவ்வொரு நாளும் நம்மிடையே தங்கியிருந்து நமக்கு உயிரூட்டுகின்ற இயேசுவின் பிரசன்னத்தை உணர்ந்து அனுபவிக்க நமக்கு வழிசெய்கிறது.

 

தற்போது வழக்கிலுள்ள திருவழிபாட்டு ஆண்டு நாள்காட்டி 1969ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் திருச்சபைக்கு அளிக்கப்பட்டது. வௌ;வேறு நாடுகளையும் மொழிப்பிரிவுகளையும் சேர்ந்த ஆயர் பேரவைகள் அந்த நாள்காட்டியை மொழிபெயர்த்ததோடு அந்தந்த இடத்துத் தேவைகளைக் கண்முன்கொண்டு சில இணைப்புகளையும் வகுத்துத் தந்தன. இவ்வாறு, தமிழக ஆயர் பேரவை தமிழ் பூசைப் புத்தகத்தில் (ஆளைளயட) பொங்கல் விழா, குடியரசு தினம் போன்ற கொண்டாட்டங்களுக்குப் பொருத்தமான மன்றாட்டுக்களை இணைத்து அளித்துள்ளது.

 

 

திருவழிபாட்டு ஆண்டில் வருகின்ற காலங்கள் இவை:

 

1) திருவருகைக் காலம் : ஷஷஆகமன காலம்|| என்று முன்பு வழங்கப்பட்ட இந்த திருவழிபாட்டு ஆண்டுக் காலம் நவம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு அருகில் வரும் ஞாயிற்றுக் கிழமையன்று தொடங்கி, டிசம்பர் 24 வரை நீடிக்கும்.

 

2) கிறிஸ்து பிறப்புக் காலம் : கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் திருவிழிப்பிலிருந்து (டிசம்பர் 24), இறைக்காட்சிப் பெருவிழாவுக்கு (சனவரி 6) பின் வருகின்ற ஞாயிறுவரை நீடிக்கும்.

 

3) தவக் காலம் : திருநீற்றுப் புதன் (யுளா றுநனநௌயனல) நாளிலிருந்து பெரிய வியாழன் மாலை வரை, அதாவது பெரிய வெள்ளிக்கு முந்திய நாள்வரை.

 

4) பாஸ்கா மூன்று நாள் விழா : பெரிய வியாழக் கிழமை மாலையிலிருந்து தொடங்கி, இயேசு உயிர்த்தெழுந்த பெருவிழா மாலை வேண்டல் வரை.

 

5) பாஸ்கா காலம் : இயேசு உயிர்த்தெழுந்த ஞாயிறு தொடங்கி பெந்தக்கோஸ்து ஞாயிறு முடிய (50 நாள்கள்).

 

6) ஆண்டின் பொதுக் காலம் : சனவரி 6ஆம் நாளுக்கு அடுத்துவருகின்ற ஞாயிறுக்குப் பின், திங்களிலிருந்து தொடங்கி, திருநீற்றுப் புதனுக்கு முந்திய நாள்வரைளூ பிறகு, பெந்தக்கோஸ்து ஞாயிறைத் தொடர்ந்து வருகின்ற திங்களிலிருந்து தொடங்கி, திருவருகைக் கால முதல் ஞாயிறுக்கு முந்திய நாள்வரை நீடிக்கும்

.

 

 

திருவருகைக் காலம்

 

இது கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு முன் வரும் காலத்தைக் குறிக்கும். நவம்பர் மாதம் 30ஆம் நாளுக்கு அருகிலுள்ள (புனித அந்திரேயா திருவிழா) ஞாயிற்றுக் கிழமையிலிருந்து தொடங்கும். யுனஎநவெரள என்னும் இலத்தீன் சொல் "வருகை" என்று பொருள்படும். வடமொழியில் "ஆகமனம்" என்றிருந்ததை நல்ல தமிழில் ஷஷதிருவருகை|| என்று கூறுகிறோம். இந்த வழிபாட்டு ஆண்டுக் காலத்தில் கிறிஸ்தவ சமூகம் மகிழ்ச்சியுணர்வோடு ஒரு ஷஷவருகை||யை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அந்த வருகை கடவுளின் வாக்கு மனிதராக இந்த உலகில் வந்து பிறந்து, இவ்வுலகில் நம்மோடு தொடர்ந்து இருந்து செயலாற்றும் நிகழ்வைக் குறிக்கும். மேலும், திருவருகைக் காலத்தில் அறிக்கையிடப்படும் விவிலிய வாசகங்கள் இயேசுவின் வாழ்க்கை நம் வாழ்க்கைக்குப் பொருள்வழங்கி, இயேசுவின் உடனிருப்பு நம்மோடு என்றும் தொடர்ந்து நிகழ்ந்து, தூய ஆவியின் உந்துதலோடு திருச்சபை சான்றுபகர அழைக்கப்படுவதைத் தெளிவாக உணர்த்துகின்றன.

 

கி.பி. 500க்கு முன்னால் திருவருகைக் காலம் ஐரோப்பாவில் சில கிறிஸ்தவ சமூகங்களால் கொண்டாடப்பட்டுவந்தது. ஆறாம் நூற்றாண்டிலிருந்துதான் திருச்சபை முழுவதும் இக்கொண்டாட்டம் பரவியது. கி.பி. 8ஆம் நூற்றாண்டிலிருந்து, திருவழியாட்டு ஆண்டின் தொடக்கமாகத் திருவருகைக் காலம் கொண்டாடப்படலாயிற்று. ஆறு வாரங்கள் நீடித்த இக்கொண்டாட்டக் காலத்தைத் திருத்தந்தை முதலாம் கிரகோரி நான்கு வாரங்களாகக் குறுக்கினார் (9ஆம் நூற்றாண்டு). இந்த ஆண்டுக் காலக் கொண்டாட்டத்துக்குப் பொருத்தமான மன்றாட்டுக்கள் பலவற்றையுடம் கிரகோரி இயற்றினார்ளூ வழிபாட்டின்போது வாசிப்பதற்கு உகந்த விவிலிய வாசகங்களையும் தேர்வுசெய்தார்.

 

மனிதராக மாறிய கடவுளின் வார்த்தை திருச்சபையில் என்றும் தங்கியிருக்கிறார் என்னும் உண்மையைத் திருவருகைக் காலத்தில் கொண்டாடுகிறோம். அதே நேரத்தில், பாவத்தால் புண்பட்ட அனைத்துலக மனித குலம் மீட்படைவதற்குக் கடவுளின் வாக்கு மனிதராகி, நிலைவாழ்வை வாக்களிக்கிறார் என்னும் உண்மையையும் மகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறோம். உலகத்தின் முடிவில் மானிட மகன் எல்லா மனிதரையும் தீர்ப்பிடுவதற்காக வருவார் என்னும் செய்தியை உள்ளடக்கிய விவிலிய வாசகங்கள் திருவருகைக் கால முதல் இருவாரங்களிலும் தரப்படுகின்றன. அடுத்துவருகின்ற இரு வாரங்களிலும் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதராகப் பிறந்த மகிழ்ச்சிநிறை செய்தியை மையமாகக் கொண்ட விவிலிய வாசகங்கள் பறைசாற்றப்படுகின்றன.

 

திருவருகைக் காலத்தில் குரு அணியும் வழிபாட்டு உடையின் நிறம் ஊதா. நாம் மனமாற்றம் அடைந்து புதியதொரு வாழ்க்கை முறையைத் தழுவ வேண்டும் என்பதை இந்நிறம் உணர்த்துகிறதுளூ அதோடு இயேசுவில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதும் அறிவுறுத்தப்படுகிறது (வெள்ளை நிறம்). திருவருகைக் காலத்தின்போது கிறிஸ்தவ மக்கள் கடவுளின் அன்பைப் பெறத் தங்கள் இதயங்களை அகலத் திறக்க அழைக்கப்படுகின்றனர். கிறிஸ்துவின் பிறப்பால் நமக்கு வழங்கப்படுகின்ற மீட்பு என்னும் கொடையை நாம் நன்றியோடு ஏற்று, அதற்கேற்ப வாழும்படி கடவுளை அணுகிச்செல்ல இந்த வழிபாட்டு ஆண்டுக்காலம் நமக்குக் கற்பிக்கிறது.